| [ புதன்கிழமை, 25 நவம்பர் 2009, 09:04.36 AM GMT +05:30 ] |
நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கே பத்மநாதனுக்கு ஆதரவான குழுவுக்கும், எதிரான குழுவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் இந்த நாளை யுத்தத்தில் பலியான தலைவர்களை நினைவு கூரும் வகையில் விமரிசையாக அனுஷ்ட்டிக்க ஏற்கனவே கே. பத்மநாதனுக்கும், மற்றுமொரு தலைவரான நெடியவனுக்கும் இடையில் நோர்வேயில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கே. பத்மநாதன் கைது செய்யப்பட்ட ஒருசில தினங்களில் கே. பி. க்கு எதிரான குழுவின் தலைவர் நெடியவன் தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை மறுநாள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற போதும், அவர்களின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதில் குழப்பத்துடன் உள்ளது. இதற்கு காரணம் கே. பத்மநாதன், பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த போதும், நெடியவன் இதனை மறுதலித்து அவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதை தவிர்த்தார். இதன் காரணமாக பிரபாகரனின் பிறந்தநாள் வரையில் அதனை இரகசியமாக பேணி, நாளை அதனை வெளியிட நெடியவனும் அவரது குழுவினரும் திட்டமிட்டனர். அவர்கள் அனைவரும் பிரபாகரன் நாளை தமது முகத்தை காட்டுவார் எனவும், நாளை மறுநாள் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார் எனவும் நம்புகின்றனர். இதே நம்பிக்கையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களான நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோர் கொண்டுள்ளமையும் இதற்கான காரணமாக கொள்ளலாம். தமிழீழத் தலைவர் நாளை மறுநாள் அதாவது 27ம் திகதி எங்கிருந்தேனும் தமது மாவீரர் நாள் உரையை நிகழ்த்துவார் என நெடுமாறன் நம்பிக்கை வெளியிட்டார். அதற்கு காரணம் பிரபாகரன் இருக்கும் போது, ஒருவாரத்துக்கு முன்னதாக மாவீரர் தின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தவருடம் விடுதலைப்புலிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் மாவீரர் வாரம் தொடர்பான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை. எனவே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தாலும் ஒரு சில நம்பிக்கைகைகள் நிலவத்தான் செய்கின்றன. இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்துள்ள நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் யாரை யார் ஆச்சரரியப்படுத்துவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். |
புதன், 25 நவம்பர், 2009
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை உலகமே எதிர்ப்பார்க்கிறது: ஆங்கில ஊடகம்
இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை
| இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை |
| [ புதன்கிழமை, 25 நவம்பர் 2009, 02:13.08 PM GMT +05:30 ] |
'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் - அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது. |
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:- நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது! 'தலைவர்' தோன்ற மாட்டார்! நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரிதாக வீழ்ச்சியடைந்து, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானாலும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தாவிட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும். அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை! மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்' என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். ''இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி. ''இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!' என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்'' என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் - இருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்'' என்று கூறுகிறார்கள் இவர்கள். இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ''பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்'' என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி! 'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் - அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். 'போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள். போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க்கிறது. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான 'றோ' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது. வெடிக்கும் பொன்சேகா! அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் பொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். ''எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்!'' என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. 'நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா?' என பொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம். இதற்கிடையில் பொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாதுகாப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் பொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது! இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா... மேற்கில் பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி... இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது இந்திய அரசு'' என்று கூறும் புலி தரப்பினர், ''இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சியுள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!'' என்கிறார்கள். 'யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?' என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு! ''சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் இராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது 'இராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்' என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை. அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், இராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்'' என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்! |
திங்கள், 23 நவம்பர், 2009
வெள்ளி, 20 நவம்பர், 2009
ஒரு நாள் விடியும் விடியும்
எங்கள் துயரங்கள் உன்னால் மடியும்
சத்தியம் வெல்லுமே தம்பி
லட்ச்சிய நிலை நில்லடா நம்பி
தத்துவம் பேசியே தருக்கர் எழுகிறார்
உத்தமர் என்றே ஊருக்குள் வருகிறார்
வாக்கு போடாதே தம்பி
இந்த ஈனப் பிறவிகளை நம்பி
ஈழப் போரையே இழிவு செய்தவர்
காட்டிக் கொடுத்தே காலடி கிடந்தவர்
நாட்டை அழித்தே
நா, நிலை போற்றுவார்
கூட்டிக் கொடுத்தே
உன்னை கூண்டில் இடுவார்
யுத்தம் சூழ்ந்து நித்தம் அழிந்தோம்
ரெத்த ஆற்றிலே நாளும் மிதந்ததோம்
எத்தர் எய்த கணைகளினாலே
ஏதிலியாகவே எங்கும் அலைந்தோம்
மூச்சுக் காத்திலே நஞ்சயும் கலந்து
எச்சங்களாகவே எம்மினம் எரித்தவர்
வித்தகராகவே வீதி வருகிறார்
வீழ்ந்து விடாதே தம்பி
உன்னை காக்க நீயே எழுந்திடு
உன் நாட்டையும் காக்கனும்
புலியாய் புறப்படு
தமிழா தமிழா தன்மானத் தமிழா
உன்னால் முடியும் உன் வேதம் புதிது
நாளை நமதல்ல இன்றே எழுது.
வல்வை சுஜேன்.
சமர்க்களங்களின் சரித்திர நாயகர்கள்

முழுமையாக ஒப்படைத்தவர்கள் !
தமிழீழத் தேசியத் தலைவரின்
போரியல் சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் !
தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும்
வரலாற்றில் இருந்தும் மறக்க முடியாதவர்கள்.
தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்தாக
புதிதாக எழுத புறப்பட்ட நாயகர்கள் !
தமிழீழ விடுதலைப் போராட்டங்களின்
சமர் ஆய்வுகளுக்குப் பொறுப்பாளர்கள் !
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்
பலமுள்ளவன் வாழ்வான் என்ற யதார்த்தில்
ஈழ விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்திற்காக
புறப்பட்ட ஈழத்தின் மைந்தர்கள் !
விடுதலைப் போராடட்த்தில்
களத்திலும் சூழலுக்கும் தம்மை ஈந்தவர்கள் !
பேரழிவுகளையும் அவநம்பிக்கைகளுமாய்
சிதைந்து கிடக்கும் தமிழத்தின் விடுதலைச் கூடர்கள் !
கற்பனைக்கு எட்டாத சிந்திக்க முடியாத
கொடூம் கண்டு விழி சிவந்த வீரர்கள் !
தமிழ் மக்களை ஒன்றினைத்த
ஒரு பெரும் சத்திகள் !
மாவீரர்களை நாம் புதைக்கவில்லை ! விதைத்திருக்கிறோம் !
எமது ஈழ மண்ணில்
எமது நாட்டில் இனக்குரோதம் விஸ்வரூபம் எடுத்துள்ளது
" இறுதிப் போரிதி உரிமைப் போரிரிது "
" அறுதியிட்டு கூறுவோம் சர்வதேசமே "
" தமிழரின் தாகம் தமழீழத் தாயகம் "
சிறி நவரத்தினம் (சுவிஸ்)
வியாழன், 19 நவம்பர், 2009
மாவீரர் - மணம் வீசும் பூக்கள்!
ஈழம் எங்கள் நாடடா ஈன்ற அன்னை தமிழடா!
நாடு எங்கள் கண்ணடா வீரம் எங்கள் நெஞ்சடா!
மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா!
வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா!
கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா!
எங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்வு கண்ட பேரடா!
வாழவேண்டும் ஈழவன் போல் என்று சொன்னதுண்டடா!
எம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே
சிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா!
பார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா
சிங்களம் தன் காலில் இட்டு கசக்குவதும் உண்டடா!
எம்மைக்காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா!
அண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா!
வீரம் என்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா
வீறு கொண்டு வேங்கையாக வாழ்த்துச் சொன்னதுண்டடா!
மெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே
நெஞ்சுருகி தலை சாய்த்து நன்றி கூறும் கேளடா!
இவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா!
இவரைக் கொண்ட எமது மண்ணை நாம் இழக்கலாகுமோ?
இவரைக் கொன்ற அரக்கர்தனை நாம் மறக்கக் கூடுமோ?
இறக்கவில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே!
புதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே!
மலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே!
மலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே!
எங்கள் மனம் தேடும் பூக்களே! வீர உரம் போடும் நூல்களே!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!
மாவீரர்

கார்த்திகை இருபத்தியேழு தமிழீழ மாவீரரின் தினம்
காவியமாகிய ஆயிரமாயிரம் உறவுகளின் தினம்
காலத்தை வென்று வரலாறு படைத்தவர் தினம்
காவல் தெய்வங்களின் புகழினைப் பாடும் தினம்
தாய் மண்ணின் மீதான அதீத காதலினால்
தானைத் தலைவனின் சேனையில் சேர்ந்தவர்
தாயகத்தைக் காத்திட எதிரிகளுடன் போரிட்டு
தாயின் மடியிலே நிரந்தரமாய் உறங்கியவர்
அரச பயங்கரவாதம் தலை விரித்தாடியபோது
அதை அடக்க தம்முயிரை அர்ப்பணித்தவர்
அகங்காரம் பிடித்த சிங்கள வெறியரின்
அராஜகத்தை அழிக்க தம்மையே ஆகுதி ஆக்கியவர்
கண் எதிரே தெரிகின்ற இந்த கடவுளர்க்கு
கள்ளமில்லா உள்ளமுடன் தீபம் ஏற்றி
கார்த்திகை மலர்களை அவர் காலடியில் தூவி
கானம் இசைக்க தமிழீழமே ஒன்று சேரு
Eelam jeevan
புதன், 18 நவம்பர், 2009
செவ்வாய், 17 நவம்பர், 2009
மாவீரரான மகளுக்காக ஈழக்கிழவி
ஆனையிரவு வீழ்ந்திடுமாம்
ஆமிக்கார பயலுக
மார்தட்டி சொன்னத்தாக
சின்னமக
கதைக்கயில
கிழவி மனம் பொருக்கலையே
கிளி நொச்சி வந்தாச்சு
பரந்தனும் தான் புடிச்சாச்சு
சிங்க கொடி நட்டாச்சுனு
சிங்களனும் கூத்தடிக்கிறான் அதை
காட்டிக் கொடுக்க பிறந்தவனும்
சேர்ந்து ரசிக்கிறான்
மண் காக்க
எங்கள் குலம் காக்க
மாலதி படை சேர்ந்து போனவளே
பொட்டைக்கு இது தேவையானு
அன்னைக்கு கேக்கையுல
பத்து தடவை பாடை வராதுனு
சொன்னவளே
நேற்றைக்கு தொலைக்காட்சி
பார்க்கையிலே
இடி தான் விழுந்திற்றே
உயிர்ற்ற பினமாய் நீ கிடக்க
உடையெல்லாம் உருகிற்றே
ஒரு விலங்கு
அம்மனமாய் அவன் அம்மா கிடந்தாலும் ரசிப்பவனோ...
இல்லை
அம்மாவையே கலவிக்கு அழைத்த
சிங்கள விசயனின் பேரனோ..
உடையெல்லாம் இழந்தாலும்
ஊர் எல்லை காத்தவளே....
உன்னை பெத்தவ வயிரெரிந்து சொல்லுரேன்
வந்த பகை அத்தனையும்
வேரோடு சாய்த்திட
புலி வீரன் புயலாய் கிளம்பட்டும்
விட்ட இடம் அத்தனையும் கிடைக்கட்டும்
உன்னை தொட்ட பய தீயில் கருகட்டும்
கண்ணகி வம்சம்னு
ஊர் சொன்னது உண்மையுனா
இந்த கிழவி வாக்கு பலிக்கட்டும்
என் பேத்தி வாழ்வாவது
சுதந்திர ஈழத்தில் இருக்கட்டும்...
புகழேந்தி பாவாணன்
மாவீரர் - மணம் வீசும் பூக்கள்!
நாடு எங்கள் கண்ணடா வீரம் எங்கள் நெஞ்சடா!
மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா!
வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா!
கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா!
எங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்வு கண்ட பேரடா!
வாழவேண்டும் ஈழவன் போல் என்று சொன்னதுண்டடா!
எம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே
சிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா!
பார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா
சிங்களம் தன் காலில் இட்டு கசக்குவதும் உண்டடா!
எம்மைக்காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா!
அண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா!
வீரம் என்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா
வீறு கொண்டு வேங்கையாக வாழ்த்துச் சொன்னதுண்டடா!
மெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே
நெஞ்சுருகி தலை சாய்த்து நன்றி கூறும் கேளடா!
இவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா!
இவரைக் கொண்ட எமது மண்ணை நாம் இழக்கலாகுமோ?
இவரைக் கொன்ற அரக்கர்தனை நாம் மறக்கக் கூடுமோ?
இறக்கவில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே!
புதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே!
மலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே!
மலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே!
எங்கள் மனம் தேடும் பூக்களே! வீர உரம் போடும் நூல்களே!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!
&nbs
திங்கள், 16 நவம்பர், 2009
ஞாயிறு, 15 நவம்பர், 2009
சனி, 14 நவம்பர், 2009
மாவீரர் கவிதை
மாவீரர் என்னும் மணிமகுடம்
தலைவர் வைத்திட்ட திருவுருவம்
காலத்தால் அழியாத காவியங்கள்
அவர் திருவடி ஓவியங்கள்
அடிமைவாழ்வில் மயங்கிய எம்மினம்
விளித்தது இன்று விடுதலைக்காய்
மாந்தரும் அங்கே மயங்கினர்
தமிழ் ஈழமதை நேசித்தே
தோள்களில் திடம் பூண்டனர்
போர்க்களம் பல கண்டு
விடுதலை வேட்கையுடன்
துளிர்விட்டு தளைத்தனர் அன்று
இன்று கல்லறையில் தூங்கவில்லை நீங்கள்
எம் நெஞ்சங்களில் கேட்கும்
இதயத்தின் துடிப்பொலியாய் நடமாடும்
கார்த்திகைப் பூக்களின் மகரந்தம்
ஈழ தேசத்தின் மொட்டுக்கள்
நீங்கள் தூங்கவில்லை இன்று
புலம்பெயர் தேசத்தில் எம்முள்
ஐந்தாம் கட்ட போருக்கு
எம்மை வழிநடத்தும் வழிகாட்டிகள்
ஈழதேசத்தின் விடி வெள்ளியாய்
மலர்ந்திருக்கும் கார்த்திகை பூக்களே
எம் உடலும் உயிரும் உள்ளவரை-மலர்
தூவி தலைசாய்க்கிறோம்
கார்த்திகை இருபத்தேழில்
இணுவையூர்சோதி
ஈழக் கவிதை
களம் பல கண்டு
தளம் பல வென்ற -வேங்கைகள் நாளினை
வளம் பல பெற்று
புலம் தனில் வாழும் தமிழர்கள் நாம்- எம்
தலம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம்
குலம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய
நலம் தனைக் கடந்து பொது நலம்தனைக் கொண்டு
புலம் தனில் உள்ளோர் -மீண்டும்
பலம் தனைப் பெற்ரால் !
இளம் தலை முறையின் இனியவழிகாட்டலில்
இழந்ததைப் பெறலாம் நாம் இழந்ததைப்பெறலாம்
பளம் கதை போதும் -இனி
பளம் கதை போதும்
கலம் கொண்டுதாக்க
களம் இப்போது இல்லை
பலம் கொண்டு தாக்க -போர்க்
களம் கூட இல்லை
வலம் வரும் உலகை
புலன் கொண்டு பார்த்தால்!
பலன் ஒன்று கிடைக்கும்
புலம் தனில் நாங்கள்
பலம் தனைப் பெற்று
நிலம் தனை மீட்போம் -நாம்
இழந்ததை மீட்போம்- தமிழ்!
ஈழத்தை அமைப்போம் !
தமிழ் ஈழத்தை அமைப்போம்!
தமிழரின் தாகம் தமிழீழ்த்தாயகம்
சி. ஜெயக்குமார்
ஈழக் கவிதைகள்

முகவரிகள் தொலைத்து
முடங்கிப்போனது நம் வாழ்வு
பட்டுணரும் வலிகளாலே
பலநாட்கள் கழிய
பட்ட்ட மரமாகிறது நம் வாழ்வு
எம்மை விட்டுச்சென்ற வசந்தம்
இன்னும் எட்டி எட்டிப் போக
ஏதிலியாய் வாடியே
ஏங்குகின்றோம் இங்கேயே
எம் இனிய ஊரைப் பிரிந்து
கூடிக் குலாவிய
உறவுகளைப் பிரிந்து
தவியாய்த் தவித்தேன்
தனி மரமானேன்
தனிமை வாழ்வியலின் வல்லிகளை
கடந்து வந்த நாட்களை
கண்முன்னே கொண்டு வர
எதிர்காலம் கேள்விக்குறியாகி
கரைகிறது யுகமாகிப் பொழுதுகள்
யுத்தத்தில் வென்றுவிட்டோம்
பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்துவிட்டோம்
நீ மகிழ்ச்சியில் திளைக்கிறாய்
ஆனாலும் இங்கே
காகிதமாய்க் கிழிவது
நாம் தானே...
எமையெல்லாம் இந்த
திறந்த வெளிச்சிறையில்
அடைத்து வைத்து
என்னதான் செய்யப்
போகின்றாய்?
ஏன் தான் எம்மை
இப்படி வதைக்கிறாய்
கூட்டுக்குள் வாழ்வதற்கு
நாம் மிருகங்கள் அல்ல
கூடிக்குலாவிச் சுதந்திரமாய்
அவையே வாழ்கின்றன
இது உனக்கும் தெரியாதா?
நாமும் உன்னைப் போல்
மனிதர்கள் தான்
எமக்கும் ஆசை உண்டு
எல்லைகள் தாண்டியே
எங்கணும் சென்றிட
விருப்பமும் உண்டு
எம்மை விடு..
எம்மை வாழவிடு...
சுதந்திரக் காற்றை
நாமும் சுவாசிப்போம்
சுற்றியே எங்கணும்
சிறகுகள் விரிப்போம்.
புரட்சிகா
| நாடு: பிரான்ஸ் | 27-11-2009 |
| பிரான்ஸ் மாநகரங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் | |
| நாடு: சுவிஸ் | 27-11-2009 |
| சுவிஸில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வு | |
| நாடு: பிரித்தானியா | 27-11-2009 |
| பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் | |
| நாடு: நெதர்லாந்து | 27-11-2009 |
| நெதர்லாந்தில் மாவீரர் நாள் | |
| நாடு: அவுஸ்ரேலியா | 27-11-2009 |
| அவுஸ்ரேலியாவில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: டென்மார்க் | 27-11-2009 |
| டென்மார்க் நகரில் மாவீரர் நாள் | |
| நாடு: ஜேர்மனி | 27-11-2009 |
| யேர்மனியில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: நோர்வே | 27-11-2009 |
| நோர்வேயில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: பெல்ஜியம் | 27-11-2009 |
| பெல்ஜியத்தில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: சுவீடன் | 27-11-2009 |
| சுவீடனில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: கனடா | 28-11-2009 |
| மொன்றியலில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: இத்தாலி | 27-11-2009 |
| இத்தாலியில் தேசிய மாவீரர் நாள் | |
| நாடு: டோகா - கத்தார் | 27-11-2009 |























