அஞ்சாரு நாளுக்குள்ள
ஆனையிரவு வீழ்ந்திடுமாம்
ஆமிக்கார பயலுக
மார்தட்டி சொன்னத்தாக
சின்னமக
கதைக்கயில
கிழவி மனம் பொருக்கலையே
கிளி நொச்சி வந்தாச்சு
பரந்தனும் தான் புடிச்சாச்சு
சிங்க கொடி நட்டாச்சுனு
சிங்களனும் கூத்தடிக்கிறான் அதை
காட்டிக் கொடுக்க பிறந்தவனும்
சேர்ந்து ரசிக்கிறான்
மண் காக்க
எங்கள் குலம் காக்க
மாலதி படை சேர்ந்து போனவளே
பொட்டைக்கு இது தேவையானு
அன்னைக்கு கேக்கையுல
பத்து தடவை பாடை வராதுனு
சொன்னவளே
நேற்றைக்கு தொலைக்காட்சி
பார்க்கையிலே
இடி தான் விழுந்திற்றே
உயிர்ற்ற பினமாய் நீ கிடக்க
உடையெல்லாம் உருகிற்றே
ஒரு விலங்கு
அம்மனமாய் அவன் அம்மா கிடந்தாலும் ரசிப்பவனோ...
இல்லை
அம்மாவையே கலவிக்கு அழைத்த
சிங்கள விசயனின் பேரனோ..
உடையெல்லாம் இழந்தாலும்
ஊர் எல்லை காத்தவளே....
உன்னை பெத்தவ வயிரெரிந்து சொல்லுரேன்
வந்த பகை அத்தனையும்
வேரோடு சாய்த்திட
புலி வீரன் புயலாய் கிளம்பட்டும்
விட்ட இடம் அத்தனையும் கிடைக்கட்டும்
உன்னை தொட்ட பய தீயில் கருகட்டும்
கண்ணகி வம்சம்னு
ஊர் சொன்னது உண்மையுனா
இந்த கிழவி வாக்கு பலிக்கட்டும்
என் பேத்தி வாழ்வாவது
சுதந்திர ஈழத்தில் இருக்கட்டும்...
புகழேந்தி பாவாணன்
