சனி, 14 நவம்பர், 2009

மாவீரர் கவிதை

கார்த்திகைப்பூக்கள்
மாவீரர் என்னும் மணிமகுடம்
தலைவர் வைத்திட்ட திருவுருவம்
காலத்தால் அழியாத காவியங்கள்
அவர் திருவடி ஓவியங்கள்
அடிமைவாழ்வில் மயங்கிய எம்மினம்
விளித்தது இன்று விடுதலைக்காய்

மாந்தரும் அங்கே மயங்கினர்
தமிழ் ஈழமதை நேசித்தே
தோள்களில் திடம் பூண்டனர்
போர்க்களம் பல கண்டு
விடுதலை வேட்கையுடன்
துளிர்விட்டு தளைத்தனர் அன்று

இன்று கல்லறையில் தூங்கவில்லை நீங்கள்
எம் நெஞ்சங்களில் கேட்கும்
இதயத்தின் துடிப்பொலியாய் நடமாடும்
கார்த்திகைப் பூக்களின் மகரந்தம்

ஈழ தேசத்தின் மொட்டுக்கள்
நீங்கள் தூங்கவில்லை இன்று
புலம்பெயர் தேசத்தில் எம்முள்
ஐந்தாம் கட்ட போருக்கு
எம்மை வழிநடத்தும் வழிகாட்டிகள்

ஈழதேசத்தின் விடி வெள்ளியாய்
மலர்ந்திருக்கும் கார்த்திகை பூக்களே
எம் உடலும் உயிரும் உள்ளவரை-மலர்
தூவி தலைசாய்க்கிறோம்
கார்த்திகை இருபத்தேழில்






இணுவையூர்சோதி

ஈழக் கவிதை

மீண்டும் எழுவோம்
பலம் சில கொண்டு
களம் பல கண்டு
தளம் பல வென்ற -வேங்கைகள் நாளினை
வளம் பல பெற்று
புலம் தனில் வாழும் தமிழர்கள் நாம்- எம்
தலம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம்
குலம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய
நலம் தனைக் கடந்து பொது நலம்தனைக் கொண்டு
புலம் தனில் உள்ளோர் -மீண்டும்
பலம் தனைப் பெற்ரால் !
இளம் தலை முறையின் இனியவழிகாட்டலில்

இழந்ததைப் பெறலாம் நாம் இழந்ததைப்பெறலாம்
பளம் கதை போதும் -இனி
பளம் கதை போதும்
கலம் கொண்டுதாக்க
களம் இப்போது இல்லை
பலம் கொண்டு தாக்க -போர்க்
களம் கூட இல்லை
வலம் வரும் உலகை
புலன் கொண்டு பார்த்தால்!
பலன் ஒன்று கிடைக்கும்
புலம் தனில் நாங்கள்
பலம் தனைப் பெற்று
நிலம் தனை மீட்போம் -நாம்
இழந்ததை மீட்போம்- தமிழ்!
ஈழத்தை அமைப்போம் !
தமிழ் ஈழத்தை அமைப்போம்!
தமிழரின் தாகம் தமிழீழ்த்தாயகம்



சி. ஜெயக்குமார்

ஈழக் கவிதைகள்

சுதந்திரக் காற்றை சுவாசிப்பது எப்போது?

முட்கம்பி வேலிக்குள்
முகவரிகள் தொலைத்து
முடங்கிப்போனது நம் வாழ்வு

பட்டுணரும் வலிகளாலே
பலநாட்கள் கழிய
பட்ட்ட மரமாகிறது நம் வாழ்வு

எம்மை விட்டுச்சென்ற வசந்தம்
இன்னும் எட்டி எட்டிப் போக
ஏதிலியாய் வாடியே
ஏங்குகின்றோம் இங்கேயே

எம் இனிய ஊரைப் பிரிந்து
கூடிக் குலாவிய
உறவுகளைப் பிரிந்து
தவியாய்த் தவித்தேன்
தனி மரமானேன்

தனிமை வாழ்வியலின் வல்லிகளை
கடந்து வந்த நாட்களை
கண்முன்னே கொண்டு வர
எதிர்காலம் கேள்விக்குறியாகி
கரைகிறது யுகமாகிப் பொழுதுகள்

யுத்தத்தில் வென்றுவிட்டோம்
பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்துவிட்டோம்
நீ மகிழ்ச்சியில் திளைக்கிறாய்
ஆனாலும் இங்கே
காகிதமாய்க் கிழிவது
நாம் தானே...

எமையெல்லாம் இந்த
திறந்த வெளிச்சிறையில்
அடைத்து வைத்து
என்னதான் செய்யப்
போகின்றாய்?
ஏன் தான் எம்மை
இப்படி வதைக்கிறாய்

கூட்டுக்குள் வாழ்வதற்கு
நாம் மிருகங்கள் அல்ல
கூடிக்குலாவிச் சுதந்திரமாய்
அவையே வாழ்கின்றன
இது உனக்கும் தெரியாதா?

நாமும் உன்னைப் போல்
மனிதர்கள் தான்
எமக்கும் ஆசை உண்டு
எல்லைகள் தாண்டியே
எங்கணும் சென்றிட
விருப்பமும் உண்டு

எம்மை விடு..
எம்மை வாழவிடு...
சுதந்திரக் காற்றை
நாமும் சுவாசிப்போம்
சுற்றியே எங்கணும்
சிறகுகள் விரிப்போம்.






புரட்சிகா
மாவீரர் நாள் கொண்டாட உள்ள நாடுகள்
நாடு: பிரான்ஸ்

27-11-2009

பிரான்ஸ் மாநகரங்களில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள்
நாடு: சுவிஸ்

27-11-2009

சுவிஸில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வு
நாடு: பிரித்தானியா

27-11-2009

பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள்
நாடு: நெதர்லாந்து

27-11-2009

நெதர்லாந்தில் மாவீரர் நாள்
நாடு: அவுஸ்ரேலியா

27-11-2009

அவுஸ்ரேலியாவில் தேசிய மாவீரர் நாள்
நாடு: டென்மார்க்

27-11-2009

டென்மார்க் நகரில் மாவீரர் நாள்
நாடு: ஜேர்மனி

27-11-2009

யேர்மனியில் தேசிய மாவீரர் நாள்
நாடு: நோர்வே

27-11-2009

நோர்வேயில் தேசிய மாவீரர் நாள்
நாடு: பெல்ஜியம்

27-11-2009

பெல்ஜியத்தில் தேசிய மாவீரர் நாள்
நாடு: சுவீடன்

27-11-2009

சுவீடனில் தேசிய மாவீரர் நாள்
நாடு: கனடா

28-11-2009

மொன்றியலில் தேசிய மாவீரர் நாள்
நாடு: இத்தாலி

27-11-2009

இத்தாலியில் தேசிய மாவீரர் நாள்
நாடு: டோகா - கத்தார்

27-11-2009

டோகா - கத்தாரில் தேசிய மாவீரர் நாள்


திலிபன் பாடல்