வெள்ளி, 20 நவம்பர், 2009

ஒரு நாள் விடியும் விடியும்

ஒரு நாள் விடியும் விடியும்
எங்கள் துயரங்கள் உன்னால் மடியும்
சத்தியம் வெல்லுமே தம்பி
லட்ச்சிய நிலை நில்லடா நம்பி

தத்துவம் பேசியே தருக்கர் எழுகிறார்
உத்தமர் என்றே ஊருக்குள் வருகிறார்
வாக்கு போடாதே தம்பி
இந்த ஈனப் பிறவிகளை நம்பி
ஈழப் போரையே இழிவு செய்தவர்

காட்டிக் கொடுத்தே காலடி கிடந்தவர்
நாட்டை அழித்தே
நா, நிலை போற்றுவார்
கூட்டிக் கொடுத்தே
உன்னை கூண்டில் இடுவார்

யுத்தம் சூழ்ந்து நித்தம் அழிந்தோம்
ரெத்த ஆற்றிலே நாளும் மிதந்ததோம்
எத்தர் எய்த கணைகளினாலே
ஏதிலியாகவே எங்கும் அலைந்தோம்

மூச்சுக் காத்திலே நஞ்சயும் கலந்து
எச்சங்களாகவே எம்மினம் எரித்தவர்
வித்தகராகவே வீதி வருகிறார்
வீழ்ந்து விடாதே தம்பி

உன்னை காக்க நீயே எழுந்திடு
உன் நாட்டையும் காக்கனும்
புலியாய் புறப்படு
தமிழா தமிழா தன்மானத் தமிழா
உன்னால் முடியும் உன் வேதம் புதிது
நாளை நமதல்ல இன்றே எழுது.

வல்வை சுஜேன்.