வியாழன், 19 நவம்பர், 2009

மாவீரர்


கார்த்திகை இருபத்தியேழு தமிழீழ மாவீரரின் தினம்
காவியமாகிய ஆயிரமாயிரம் உறவுகளின் தினம்
காலத்தை வென்று வரலாறு படைத்தவர் தினம்
காவல் தெய்வங்களின் புகழினைப் பாடும் தினம்

தாய் மண்ணின் மீதான அதீத காதலினால்
தானைத் தலைவனின் சேனையில் சேர்ந்தவர்
தாயகத்தைக் காத்திட எதிரிகளுடன் போரிட்டு
தாயின் மடியிலே நிரந்தரமாய் உறங்கியவர்

அரச பயங்கரவாதம் தலை விரித்தாடியபோது
அதை அடக்க தம்முயிரை அர்ப்பணித்தவர்
அகங்காரம் பிடித்த சிங்கள வெறியரின்
அராஜகத்தை அழிக்க தம்மையே ஆகுதி ஆக்கியவர்

கண் எதிரே தெரிகின்ற இந்த கடவுளர்க்கு
கள்ளமில்லா உள்ளமுடன் தீபம் ஏற்றி
கார்த்திகை மலர்களை அவர் காலடியில் தூவி
கானம் இசைக்க தமிழீழமே ஒன்று சேரு

Eelam jeevan